விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் பகுதியில் அனுமதியின்றி கோடி கணக்கு ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பதுக்கி வைக்கப்பட்ட குடோனுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளர் பிரகாஷை காவல் துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பட்டாசு கடை தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் எதிரொலியால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டாசுகளை மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் தீயணைப்புதுறை மாவட்ட அலுவலர் பிடல் கேஸ்ட்ரோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .
Watch Annaatthe Trailer: வந்தாரு காளையன்.. மரண மாஸ்.. வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்..!
இந்த நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் என்ற பகுதியில் நித்யா என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை இயங்கி வருகிறது. அதனை அவரது கணவர் பிரகாஷ் நிர்வகித்து வருகிறார். அக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட போது கடைக்கான உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததும், மேலும் தரைத்தளம் மற்றும் 3 அடுக்கு கட்டிடம் முழுவதும் கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிமம் இல்லாமல் பட்டாசுகளை கொள்முதல் செய்து அவற்றை பெட்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக உரிமம் இன்றி செயல்பட்டு வந்த கடைக்கும், எவ்வித பாதுகாப்பும் இன்றி கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் ஆகியவைகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். மேலும் கடையில் உரிமையாளரான பிரகாஷை கைது செய்த வளவனூர் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியதற்காக பிரதமர் படத்திற்கு மலர் தூவி வாழ்த்து - தபெதிகவினர் கைது
பின்னர் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் : உரிமம் இல்லாமல் பட்டாசு கடை வைத்தால் சட்டப்படியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் பட்டாசு கடைகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்து கொண்டார். 7 பேர் உயிரிழப்புக்கு பிறகு அதிகாரிகளின் அவசர ஆய்வுகளால் பட்டாசு கடை வைத்திருப்போர்கள் களக்கத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்