விழுப்புரம்: மயிலம் அருகே வீடுர் அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற புதுவை  திருபுவனை சேர்ந்த சுதாகர் ( வயது) 25 என்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


புதுவை மாநிலம் திருபுவனை புதுக்காலனியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு இன்ப சுற்றுலா சென்றார். அங்கு வீடூர் அணையின் கரையில் அமர்ந்து அனைவரும் மது அருந்தினர். பின்னர் அணையின் கரையில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுதாகர் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் அவரை நீரில் மூழ்கி நீச்சல் அடித்து தேடினர். இதில் சுதாகரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.


இந்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து விக்கிரவாண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் வீடூர் அணைக்கு வந்து இரவு 8 மணிவரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு வீடூர் அணைக்கு மீண்டும் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவர் குளித்த இடத்தின் அருகிலேயே சேற்றில் சிக்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தார். உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் வீடூர் அணையின் கரையில் வைத்தனர். விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப ரிசோதைனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண