விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பந்தூர் ஊராட்சியில் மொடையூர், கம்பந்தூர், துடுப்பாக்கம், தையூர் போன்ற பகுதிகளை இணைக்கும் சந்திப்பு சாலையில் பொதுமக்கள் குடிநீர் அருந்தும் வகையில் 600 லிட்டர் அளவு கொண்ட குடிநீர் டேங்க் மின் இணைப்பு உடன் கூடிய மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேங்கில் இருந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மொடையூர்  பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பந்தூர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் டேங்கில் இருந்து குடிநீர் எடுத்து செல்வது வழக்கம். இந்த டேங்கில் குடிநீர் சுவையாக இருப்பதால் பக்கத்து கிராம மக்கள் உட்பட ஏராளமான மக்கள்  குடிநீர் எடுத்து சொல்வது வழக்கமாக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நாய்க்குட்டியை அடித்து அந்த வாட்டர் டேங்கில் போட்டுள்ளனர்.




இதனைத் தொடர்ந்து, இன்று அந்த டேங்கில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை  மர்மநபர்கள் யாரோ கலந்துள்ளனர். காலையில் மக்கள் குடிநீர் எடுத்து செல்ல வந்தபோது தண்ணீரில் மருந்து நாற்றம் அடிப்பதாக சந்தேகமடைந்தனர். இதனால், மக்கள் நீரைக் குடிக்காமல் போலீசாருக்கும்,  வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நீரினை மக்கள் கீழே கொட்டி டேங்கை அப்புறப்படுத்தினர்.




தொடர்ந்து சமூக விரோதிகள் சாதி பாகுபாட்டை காரணம் காட்டி விஷம் வைத்து பொதுமக்களை கொள்ள சதி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக செஞ்சி காவல்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி புகார் கொடுத்துள்ளார். செஞ்சி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மொடையூர், துடுப்பாக்கம்,  கம்பந்தூர் போன்ற பகுதி கிராம மக்கள் இதில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மொடையூர் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றோம். ஆதிதிராவிடர் என்பதால் நீங்கள் இந்த குடிநீரை எடுத்து செல்லகூடாது என மிரட்டல் விடுத்த நிலையில் தற்போது குடிநீரில் விஷம் கலந்துள்ளனர்” என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண