விழுப்புரத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் 13 பிற தொழில்கள் சேர்க்கப்பட்டதை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா தொழிலாளர்கள் கண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரத்தில் விஸ்வகர்மா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் கண்ணார், கருமார், தச்சர், சிற்பி, பொற்கொல்லர் உள்ளிட்ட ஐந்து தொழில்கள் மட்டும் அல்லாமல் கூடுதலாக 13 தொழில்களை சேர்த்து திட்டத்தை உருவாக்கி இருப்பதாகவும் மேலும் அனைத்து தொழில்களையும் உள்ளடக்கி தபால் தலை வெளியிட்டல் அதை கண்டித்தும் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்தும், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சேகர் கூறுகையில்:


விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்களின் உரிமை காப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விஸ்வகர்மா தொழிலாளர்களை தவிர்த்து கூடுதலாக 13 தொழில்களை சேர்த்து ஒன்றிய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் தலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனை கண்டிக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக மோடி அரசுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மனதில் வைத்து தான் இந்த விஸ்வகர்மா யோஜன திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் மூலம் இந்த தொழிலாளர்கள் பயன்பெற்று வகிறார்கள்.


இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஒன்றிய அரசின் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் இந்திய மக்கள் தொகையில் உள்ளனர் அதனை கருத்தில் கொண்டு தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசு இதனை திரும்ப பெறவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டமும் அதனை தொடர்ந்து இந்திய அளவில் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்தார்.