விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டுவரும் மீன் மார்க்கெட்டினை எம்ஜி சாலைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் கண்ணீர் மல்க விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.


விழுப்புரம் நகரபகுதியான எம்.ஜி. சாலையில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் கொரனோ காலகட்டத்தில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்நிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 4 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 2016 ஆம் ஆண்டு அனிச்சம்பாளையத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன. அனிச்சம் பாளையத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் அனிச்சம்பாளையத்திற்கு செல்லாமல் புதிய பேருந்து நிலையம் அருகிலையே மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தததை தற்போது நகராட்சி நிர்வாகத்தினர் மீண்டும் பழமையான இடமான எம்ஜி சாலையில் செயல்பட்டு வந்த இடத்திற்கே செயல்பட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


நகரட்சி நிர்வாகத்தினர் மீன் மார்க்கெட்டினை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீன் மார்க்கெட்டினை மாற்றக்கூடாதென வலியுறுத்தி மீன் வியாபாரிகள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். மேலும், கொரனோ காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தினை சந்தித்த தாங்கள் இப்பொழுது தான் மீண்டு வருவதாகவும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து வைத்துள்ளத்தை இடத்தினை மாற்றம் செய்வதால் நஷ்டம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வியாபாரம் பாதிகப்படுமென கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.