விழுப்புரம் மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் பழனி அவர்கள் இன்று (08.02.2023) துவக்கி வைத்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனை காத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் மற்றவரின் துணையின்றி சுயமாக செயல்படும் பொருட்டு, அதிநவீன உபரகணங்களை வழங்கி மாற்றுத்திறனாளிகளை காத்து வருகிறார்கள். மேலும், மாவட்ட அளவில் அவ்வப்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம் நடத்தி மாற்றுத்திறன் கொண்டவர்களை கண்டறியவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.


அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 18 வயதிற்குட்பட்ட 4682 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்காக விழுப்புரம் நகராட்சி மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 08.02.2023 முதல் 02.03.2023 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. தொடக்க நாளான 08.02.2023 இன்று நகராட்சி உயர்நிலைப்பள்ளயிலும், 09.02.2023 அன்று வானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 10.02.2023 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 14.02.2023 அன்று முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 15.02.2023 அன்று மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டேரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 16.02.2023 அன்று செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 17.02.2023 அன்று மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 21.02.2023 அன்று காணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும்,


22.02.2023 அன்று விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23.02.2023 அன்று ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருங்கம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 24.02.2023 அன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 28.02.2023 அன்று கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 01.03.2023 அன்று கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 02.03.2023 அன்று வல்லம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.


இச்சிறப்பு மருத்துவ முகாமில், தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களை தேர்வு செய்திடுவதற்கு எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் Opthal Technician ஆகியோர்கள் கலந்துகொண்டு 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.


இச்சிறப்பு மருத்துவமுகாமில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், அட்டைக்கான பதிவுகள் மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்க் தேர்வு செய்தல், அறுவை சிகிச்சை மாணவர்களை கண்டறிதல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை பெற்று தருதல், இலவச பேருந்துஃஇரயில் பயண அட்டை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி குழந்தையினை கொண்ட பெற்றோர்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி பெறுமாறு மாவட்ட ஆட்சியர்  பழனி அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தலா ரூ.9,475ஃ- வீதம் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.56,850 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியும், தலா ரூ.1,950%- வீதம் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.3,900%- மதிப்பீட்டில் நடை பழகு உபரகரணங்கள் வழங்கப்பட்டது.