தந்தையின் நினைவு நாளில் மகன் செய்த நெகிழ்ச்சி செயல்; அசந்துபோன பொதுமக்கள்

தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாள் பெருமைப்படுத்தும் விதமாக அவரது குடும்பத்தினர் இரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continues below advertisement
விழுப்புரத்தில் தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளை பெருமைப்படுத்தும் விதமாக அவரது குடும்பத்தினர் இரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தந்தையின் நினைவு நாளில் இரத்த தானம் செய்த குடும்பத்தினர்

விழுப்புரம் மாவட்டம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த வங்கி ஊழியர் ஆகவும், பல சமூகப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சமூக சேவகாரனாக மணிகண்டன் (45), 19 முறை ரத்த தானம் செய்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வந்தார். இவர் வருடத்தில் மூன்று முறை ரத்த தானம் செய்வார். அதுமட்டுமல்லாமல் பல சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும் உள்ளார்.
 
இவர் கடந்தாண்டு 2024 வாகன விபத்தில் மணிகண்டன் இறந்துவிட்டார். இவர் இறந்து ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், மணிகண்டனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளில், மணிகண்டனின் மகன்களான ராகுல், வீரேந்தர், தாயார் தவமணி மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் இணைந்தும், இவர்களுடன் மணி மாணவர்கள் மற்றும் மனிதம் காப்போம் அறக்கட்டளை இணைந்து, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள அரசு மருத்துவமனையில், மணிகண்டனை பெருமைப்படுத்தும் விதமாக ரத்ததான முகாமை நடத்தினர். இவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் ஒத்துழைப்பினை மருத்துவர் லதா வழங்கினார்.
 
இதனைப் பற்றி மணிகண்டனின் இரண்டாவது மகனான வீரேந்தர் கூறுகையில், எங்கள் அப்பா இரத்த வங்கி ஊழியராக 10 வருடம் பணிபுரிந்து இருந்தார். இவர் இருக்கும்போது கூட ரத்தம் தானம் செய்து விட்டு தான் வந்தார். சிறுவயதில் இருந்து எங்களுக்கு ரத்ததானம் பற்றி பல விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிந்த அளவிற்கு எல்லோருக்கும் ரத்ததானம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
 
இவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டார். எங்கள் அப்பாவே எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அப்பா எங்களை விட்டு போய் இருக்கலாம் ஆனால் "அவர் சொன்ன வார்த்தைகள் எங்கள் மனதை விட்டு நீங்கவில்லை ". எனவே அப்பா சென்று பிறகும் அவர் கடந்த வந்த வழியில் நாங்கள் செல்கிறோம். அந்த வகையில் எங்கள் அப்பாவை பெருமைப்படுத்தும் விதமாக அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளில் நாங்கள் அனைவரும் இணைந்து ரத்த தானம் செய்துள்ளோம் என பெருமையாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் , அனைவருமே ரத்த தானம் செய்ய வேண்டும், நீங்கள் செய்யும் ரத்த தானம் கண்டிப்பாக ஒரு உயிரை காப்பாற்ற பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
 
தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளில் குடுமபத்துடன் ரத்த தானம் செய்த நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.
 

இரத்த தானம் 

ஒரு நபர் தானாக முன்வந்து இரத்தம் எடுக்கப்பட்டு, இரத்தமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும்போது மற்றும்/அல்லது பிரிவினை ( முழு இரத்தக் கூறுகளைப் பிரித்தல் ) எனப்படும் செயல்முறை மூலம் உயிரி மருந்துகளாக மாற்றப்படும்போது இரத்த தானம் நிகழ்கிறது. தானம் முழு இரத்தமாகவோ அல்லது குறிப்பிட்ட கூறுகளை நேரடியாகவோ (அபெரெசிஸ்) இருக்கலாம் . இரத்த வங்கிகள் பெரும்பாலும் சேகரிப்பு செயல்முறையிலும் அதைத் தொடர்ந்து வரும் நடைமுறைகளிலும் பங்கேற்கின்றன.
Continues below advertisement
Sponsored Links by Taboola