விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் பயன்பாட்டிற்குள்ள திறந்தவெளி கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், ஆட்சியர் ஆய்வில் தேன் அடை கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, அதன்பிறகு குழாய்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் திறந்த வெளி கிணற்றின் பக்கவாட்டு சுவரில் தேன் அடை இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மர்ம நபர்கள் யாரோ கிணற்றின் மேல் மலம் கழித்து சென்று விட்டதாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.


இந்த நிலையில் கிணற்றிலிருந்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி உடனடியாக போலீசார் உடன் ஆய்வு செய்தார். அப்பொழுது கிணற்றிலிருந்து தேன் அடையானது எடுக்கப்பட்டது. கிணற்றில் மலம் கழிக்கவில்லை அது தேன்கூடு தான் எனவும் மக்கள் அதிர்ச்சியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.