விழுப்புரம்: பள்ளிக்கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக உள்ளவர்களை பணிநிரந்தரம் செய்ய கோரி முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் பணிநிரந்தரம் செய்தவதாக தேர்தல் வாக்குறுதியில் அளித்த திமுக அரசு மூன்றாண்டு கடந்தும் செய்யவில்லை எனவும் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்ற நிலையில் பகுதிநேர ஆசியர்களின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கினைப்பாளர் செந்தில்குமார் பேசுகையில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவதாக திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் அறிக்கையில் கொடுத்தது நிறைவேற்றாமல் மூன்றாண்டு கடந்தும் பணி நிரந்தம் செய்யவில்லை என வேதனை தெரிவித்தார்.


பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டாலும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் இதனால் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கும் போது மனு அளிப்பதாகவும் அந்த மனு மீதான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர். மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியமாக பத்தாயிரம் வழங்கப்பட்டது கூடுதலாக 2500 ரூபாய் உயர்த்தப்பட்டு ஊதியம் 12500 ரூபாய் வழங்கப்படுவதில் பத்தாயிரம் ஒரு தேதியிலும் 2500 ரூபாய் மற்றொரு தேதியில் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர். 


பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் :


மூன்று ஆண்டு முடிந்தும் திமுக தேர்தல் வாக்குறுதி 181 நிறைவேற்றப்படாமல் உள்ளதால் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை உடனே நிறைவேற்றி தமிழக முதல்வர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிட வேண்டும்.


2012 ஆம் ஆண்டு அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் நியமித்து, தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் பாடங்களை கற்பிக்கும் 12 ஆயிரம் பேரை, தமிழக அரசுப் பணிக்கு ஈர்த்து சிறப்பாசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்.


ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு ( 04-10-2023) பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பிற்கு அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.


பணிக்கால மரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.


பணி ஓய்வு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்


இஎஸ்ஐ, இபிஎப் திட்டத்தில் இணைக்க வேண்டும்


பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.


13 ஆண்டுகால தற்காலிகப் பணியை, ரூ.12,500 தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.