விழுப்புரம்: கண்டமங்கலம் அருகேயுள்ள வாதானூர் அத்திக்குளம் பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பின் போது பத்துக்கும் மேற்பட்ட உறைக் கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அகழாய்வு நடத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள வாதானூர் கிராமத்தில் உள்ள அத்திக்குளம் பகுதியில் மகாத்மா ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணி கிராம பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அத்திக்குளம் பகுதியில் கிராம பணியாளர்கள் குளத்தை தூர்வாரும் போது சுடுமண்னால் செய்யப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த உறை கிணறுகள் ஆறு குளம் உள்ள பகுதிகளில் நீரை சேமித்து வைத்து தெளிந்த பின் அருந்துவதற்கு சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் பத்தடிக்கு ஒன்று அருகருகில் உள்ளதால் மன்னர் காலத்தில் குதிரைகளுக்கு நீர் அருந்தவும் உறை கிணறுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுவதால் தொல்லியல் துறை அதிகாரிகள் இந்த பகுதியில் அகழாய்வு செய்து எந்த நூற்றாண்டுகளில் இந்த உறைகிணறுகள் பயன்படுத்தப்பட்டு வந்தது என தெரிவிக்கவேண்டுமென அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்