தீப்பற்றி எரிந்த கூரை


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே தேவனூர் கிராமத்தில் பட்டாசு வெடித்ததில் பக்கத்து வீட்டு மாடியில் இருந்த கூரை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (நவம்பர் 12) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் இப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பட்டாசுகள் இல்லாத தீபாவளி பண்டிகை ஏது என்பது போல அதிகாலை முதல் இரவு வரை விதவிதமாக பட்டாசுகளை வெடிக்க விட்டு இந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில்  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் (வயது 68), இவர் தவிடு வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டு பக்கத்தில் தீபாவளி காரணமாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது ராமு என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் இருந்த கூரையில் எதிர்பாராத விதமாக தீப்பொறிப்பட்டுள்ளது. தீப்பொறி பட்டதன் காரணமாக பற்றி எரிய தொடங்கிய கூறையானது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.


சாம்பலாகிய தீப்பற்றி எரிந்த கூரை


இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர், இருப்பினும் அணைக்க முடியாததால் திருக்கோவிலூர் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இருப்பினும் தீயை அணைக்கும் முன்பாகவே ராமு என்பவரின் வீட்டில் மொட்டை மாடியில் இருந்து கூரையானது முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. மேலும் இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் தீ விபத்து குறைவு - போலீசாருக்கு குவியும் வாழ்த்து 


குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை போது தீ விபத்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் , இந்த ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து எடுத்த நடவடிக்கையால் விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்களின் அவ்வப்போது நடத்தப்படும் விழிப்புணர்வு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தீ விபத்து குறைந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.