கடல் அரிப்பு, சுனாமி பேரலை சீற்றத்தை தடுப்பதற்கு அடிப்படை ஆதாரமாக உள்ள அலையாத்தி காடுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த ஆண்டு தோறும் ஜூலை 26ல் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.


மணல் மேடாகி போன நிலங்களை சுத்தம் செய்து கால்வாயை துார்வாரி சீரமைத்து இவை வளர்க்கப்படுகிறது. இதனால் வனப்பரப்பு அதிகமாகும். உயிரினங்கள் பெருகும். நிலத்தடி நீர் உவர்ப்புத்தன்மை மாறுகிறது. மழைப்பொழிவும் கிடைக்கிறது. ‘மாங்குரோவ்' காடுகளின் பயன்கடலில் சுனாமி பேரலையின் சீற்றத்தை தடுப்பதில் மாங்குரோவ் காடுகளின் பங்கு அதிகளவில் உள்ளது.


கடற்கரையோரங்களில் கோடிகளை செலவிட்டு கொட்டப்படும் கான்கீரிட் கற்களைவிட ஆயிரம் மடங்கு மேலானவை அலையாத்திகாடுகள். நத்தைகள் சேறு, நண்டு சிங்கி, இறால் பால், கடற்புல், ஆக்காட்டி குருவி, வெண்கொக்கு, ஊரிநாரை, கண்டற்சிப்பி, மீனினங்கள் என ஆயிரக்கணக்கான உயிர்களின் உறைவிடமாக இருப்பவை. இத்தகைய சிறப்பு மிக்க மாங்குரோவ் காடுகள் மரக்காணம் கழுவெளி மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியில் கடல் பசு, கடல் குதிரை, கடல் பாசி உள்ளிட்ட கடல்சார் வன உயிரினங்கள் வாழ்கின்றன.


சென்னை - புதுவை இடையே மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டிய கழுவெளி, வங்கக் கடல் நீரும், நிலத்தடி நன்னீரும் இணைகின்ற சதுப்புநிலப் பகுதியாக உள்ளது. பழைய மாங்குரோவ் காடுகள் என்றழைக்கப்படும் இப்பகுதியில், 160 ஏரிகள் வரை உள்ளன.இந்த ஏரி நீரும், மழை நீரும், கடல் பகுதியின் முகத்துவார நீரும் இணைந்து சங்கமித்து உவர்ப்பு நீர் கொண்ட வித்தியாசமான பகுதியாக இது உள்ளது. இங்கு, உப்பு உற்பத்தி, மீன்பிடி, விவசாயம் பரவலாக நடைபெறுகிறது.


இந்த நிலையில் இன்று மரக்காணம்‌   கடலோர பகுதிகளில்‌ 135 சதுப்பு நில தாவரங்களை பள்ளி மாணவர்கள்‌ மற்றும்‌ கிராம மக்களை ஒருங்கிணைத்து நடவு செய்வதன்‌ மூலம்‌ சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து திண்டிவனம்‌ வனசரக அலுவலர்‌ ப. புவனேஷ்‌ வனவர்‌. பாலசுந்தரம்‌ மற்றும்‌ குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண