விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிந்தாபுரத்தில் உள்ள திண்டிவனம்- காஞ்சிபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராண்டிபுரம் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக இங்குள்ள பொதுமக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், இதே போன்று இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறியும், அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிந்தாபுரம் என்னும் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் - திண்டிவனம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோசனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும்  ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் மற்றும் துணை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வெகு நேரமாகியும் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் ஆவேசம் அடைந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் வந்த அதிகாரிகளுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் சாலை மறியலை கலைத்தனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண