விழுப்புரம்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மின்னனு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கிலிருந்து 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர் பழனி மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்ற நிலையில் தேர்தலில் வாக்களிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன.


தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், வானூர், மயிலம் விழுப்புரம், திருக்கோவிலூர் போன்ற சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குபதிவு இயந்திரம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரம் பாதுகாப்பு கிடங்கிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. அனைத்து கட்சி பிரதிநிதிகள், ஆட்சியரும் தேர்தல் அலுவலரான பழனி முன்னைலையில் பார்வையிட்டு 7 இடங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கபட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  1966 வாக்குச்சாவடி மையங்களில் 2,356 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unitt), 2,356 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unitt), 2,553 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT) என மொத்தம் 7,265 மின்னுண வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.