மரக்காணம் அருகே அமைய உள்ள மீன்பிடி துறைமுகத்தை தனிநபர் வழக்கு தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டதால் பணியை தொடங்க வேண்டுமென விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியில் சாலை மறியல்


விழுப்புரம், மாவட்டம்  அழகன்குப்பம், மற்றும் செங்கல்பட்டு, மாவட்டம் ஆலம்பரைகுப்பம், கழுவேலி, கழிமுகத்தில் மீன்பிடி துறைமுகங்கள், அமைக்கும், பணிக்கு தமிழ்நாடு அரசு ஆணை எண்.28. கால்நடை பராமரிப்பு. பால்வளம் மற்றும் மீனவளத்துறை (மீவ-1), .06.02.2020ன் மூலம் ரூ.235.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, இப்பணிக்கான பணித்தளம் ஒப்பந்ததாரருக்கு, ஒப்படைக்கப்பட்டு 07.01.2022 முதல் பணி நடைபெற்று வந்தது.


இந்நிலையில் சென்னை, வேளச்சேரியை சேர்ந்த யுவதீபன் (26 வயது) என்பவர், தென்மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில் (National Green Tribunal) கீழ்கண்ட கோரிக்கைகளுடன் வழக்கு தொடர்ந்துள்ளார். (வழக்கு எண்.14, படி கழுவேலி மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டத்தில், நேர்கல்சுவர் அமையவுள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் பிரிவு- 1A-ல் இடம்பெறுவதாகவும் மற்றும் ஆமைகள் முட்டைகளிடும் இடம் என்றும், கழுவேலி பறவைகள் சரணாலயத்தை பாதிக்கிறது என்றும், கழுவேலி உப்பங்குழியில் உள்ள பல்லுயிர்களை பாதிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


04.03.2022 அன்று மேற்குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு வந்ததை, தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்ய கூட்டுக்குழு (Joint Committee) அமைத்து ஆணையிட்டுள்ளது. இதனடிப்படையில் மத்திய சுற்றுசூழல், வனம் காலநிலை மற்றும் அமைச்சகத்தின் துணை பொது ஆய்வாளர்  தலைமையின் கீழ் கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர், மற்றும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி, ஆகியோரை கொண்ட கூட்டுக்குழுவினர், ஆலம்பரைகுப்பம் மற்றும் நேர்கல் சுவர் ஆகிய இடத்தை, 15.03.2022 அன்று பார்வையிட்டும், அழகன்குப்பம், ஆமைகள், முட்டையிடும் தளத்தை, ஆய்வு செய்தும், மேற்ப்படி, ஆய்வு அறிக்கையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேர்கல் சுவர் அமைய உள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் பிரிவு -1A-ன் கீழ் இல்லை எனவும், மேலும் ஆமைகள் முட்டைகளிடும் இடத்தில் இல்லை, எனவும், இத்துறைமுக கட்டுமான பணி கழுவேலி பறவைகள் சரணாலயத்தை பாதிக்கவில்லை, எனவும், இத்துறைமுக கட்டுமானத்தால் கழுவேலி உப்பங்குழியில் உள்ள பல்லுயிர்கள் பாதிக்கப்படவில்லை. என அறிக்கை சமர்ப்பித்து மேற்ப்படி துறைமுக வேலை தொடங்க இருந்த நிலையில், கடந்த


08.04.2022 அன்று நடந்த வழக்கு விசாரணையின் போது அரசாணை எண் 146, கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை  (16.09.2016 ல்) அழகன்குப்பம் மீனவ கிராமம், ஆமைகள் முட்டைகளிடும் இடம், என அறிவித்துள்ளதை மறு பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, கோட்டக்குப்பம், மற்றும் மரக்காணம் காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட 19 கிராம மீனவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 40 கி.மீட்டர் தூரம் கடல் பரப்பளவு உள்ள எங்களுக்கு, பெரிய படகுகளை நிறுத்த எந்த வசதியும் இல்லை எனவும், ஒவ்வொரு தடவையும் பெரிய படகுகளை நிறுத்த 35 கி.மீட்டர் தூரம் சென்று புதுச்சேரி கப்பல் துறைமுகத்தில் நிறுத்த வேண்டியுள்ளது எனவும்,


துறைமுகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளை நிறுத்த மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது எனவும் , இதனால் எங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினை ஏற்ப்படுகிறது, எனவும், இந்நிலையில்,  ஆமைகள், அழகன்குப்பம் மீனவ கிராமத்தில், முட்டையிடும், இடமா என, மறுபரிசீலனை செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து,  செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பரை கோட்டையில், தனியார் விடுதி நடத்தும், ஒரு நபருக்காக, கப்பல் துறைமுக வேலையை, தடை செய்து வைத்திருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்து,  விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட 21கிராம மீனவர்கள், மீனவ கிராம முக்கியஸ்தர்கள்  கூனிமேடு குப்பம் எல்லையம்மன்  கோயிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 500 நபர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் துறைமுக வழக்கு 26.09.22  தேதி விசாரணைக்கு வருகிறது.