விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அன்னியூரில் ஏராளமான குடிசை வீடுகள் அமைந்த பகுதியாக உள்ளது. இந்த குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் விழுப்புரம் அல்லது செஞ்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்பு பணிக்காக வரும் சூழல் உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு தாமதம் ஏற்படுவதால், சேதம் அதிகமாகிறது. இதனால் அன்னியூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக  கோரிக்கை விடுத்தனர். 


இந்த நிலையில், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், அன்னியூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, அன்னியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்திற்கு அருகில் உள்ள பழமையான பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தீயணைப்பு நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 10ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த தீயணைப்பு நிலையத்தில்  தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 17 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீயணைப்பு வாகனம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. 


இந்த நிலையில், புதிதாக திறக்கப்பட்ட தீயணைப்பு நிலையத்தில் அடிப்படை வசதி இல்லை  எனவும் குறிப்பாக தண்ணீர் வசதி, கழிவுநீர் வசதி, உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை, மேலும் தீயணைப்பு வாகனத்திற்கு  தண்ணீர் நிரப்பு கூட அங்கு வசதி இல்லை, அருகில் உள்ள ஏரியில் சென்று தான் தண்ணீர் பிடித்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அவசர கதியில் திறக்கப்பட்ட தீ அணைப்பு நிலையம்  அடிப்படை வசதி இல்லாமல் இயங்குவதால், சரியான முறையில் அங்கு  பணியாற்ற மூடியவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் புலம்பி வருகின்றனர். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண