விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், அதனை தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செரிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்ட சமூலநலத்துறை அதிகாரிகளுடன் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்:


தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 89 குழந்தைகள் இல்லம் மூடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உரிய அனுமதியுடன் இல்லங்கள் செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசும், ஒன்றிய அரசும் தனித்தனியாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனை ஒன்றாக மாற்ற தேவையில்லை. அடையாள அட்டை பெற தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காவல்துறை சார்பில் தனிப்பிரிவு செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் வேலைக்கு செல்லும் மகளிருக்காக புதிய கட்டிடம் கட்டப்படும். தற்போது திருச்சி, தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் மகளிருக்கான விடுதிகள் கட்டப்பட்டு வருகிற்து.மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள பயன அட்டை வழங்க முதல்வரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது தொடர்பான கேள்விக்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அரசு எப்போது மக்களுடன் மக்களாக உள்ளது. மக்களின் முடிவுகளின் பக்கம் தான் அரசு உள்ளது என்று கூறினார்.


கர்ப்பினி பெண்கள் தினமும் ராமாயணம் படித்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என தமிழிசை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், கர்ப்பிணி பெண்கள் படிக்கலாம், இசை கேட்கலாம். அதனால் நன்மைதான். ஆனால் ஒரு மருத்துவராக இப்படி பேசுவது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண