விழுப்புரம்: செஞ்சி அருகே சிறுணாம்புண்டி கிராமத்தில் எஸ்சி, எஸ்டி வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டிய நபர் மீது பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 14 .11. 2023 அன்று சிறுணாம்புண்டி கிராமத்தில் என் உறவினர் ஒருவர் இறந்து விட்டார், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லும் போது உறவினர்கள் பட்டாசு வெடித்துள்ளார்கள். அங்கு இருந்த அதே ஊரைச் சேர்ந்த வின்சன் என்கின்ற பிரபாகரன் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அங்கிருந்தவர்கள் ஏன் சண்டை இடுகிறார்கள் என்று கேட்டதற்கு உங்கள் அனைவரையும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் அனந்தபுரம் காவல் நிலையத்தில் இருந்து சுப்பிரமணியனுக்கு தொடர்பு கொண்ட போலீசார் உங்கள் மீது பிரபாகரன் என்பவர் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மேலும் அவரை கொலை செய்ய முயன்றதாகவும் புகார் அளித்துள்ளார் என காவலர்கள் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்றதும் காவலர்கள் எதிர் தரப்பு மனு தாரார் பிரபாகரன் வரவில்லை, நாங்கள் உங்களுக்கு தகவல் கொடுக்கும் போது வரவும் எனக் கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். ஐந்து நாட்களுக்குப் பின் அனந்தபுரம் காவல் நிலையத்திலிருந்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரைண செய்யாமல் வழக்கு பதிவு
மேலும் எங்களை விசாரிக்கவும் இல்லை, எவ்வித அழைப்பும் இல்லாமல் இது போன்ற வழக்கு பதிவு செய்திருப்பதை விசாரணை செய்ய வேண்டும் எனவும் எங்கள் பகுதியில் ஜாதி, மதம், பேதம் இல்லாமல், ஜாதி சண்டை மத சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். பிரபாகரன் என்பவர் கிறிஸ்த்துவராக இருந்து பின்னர் இந்துவாக மாறி மத சண்டையை ஏற்படுத்துகிறார். எங்கள் கிராமம் அமைதியாக இருக்கும் போது ஜாதி சண்டையை உருவாக்கி வருகிறார். மேலும் எஸ்சி எஸ்டி வழக்கு தொடருவேன் என மிரட்டி வருவதாகவும், மேலும் எஸ்சி எஸ்டி வழக்கு வைத்து அப்பகுதியில் மிரட்டிவருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்