விழுப்புரம் மாவட்டம்  டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏழாம் ஆண்டு  சமத்துவ பொங்கல் திருவிழா, கல்லூரி மாணவிகளின் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடினர். தமிழர்களின் முக்கியமான பண்டிகையில் ஒன்று தான் பொங்கல் பண்டிகை.  இந்த பொங்கல் பண்டிகையின்போது அனைவரும் புத்தாடை அணிந்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் பல்வேறு பகுதியில், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளிலும் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இங்க பயிலும் கல்லூரி மாணவிகள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைபடி புடவை அணிந்து வந்து, பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.


பொங்கல் பண்டிகை - வங்கிகளுக்கு விடுமுறை 


ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17-ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனவரி 13-ம் தேதி வங்கிகளுக்கு 2-வது சனிக்கிழமை விடுமுறை, ஜனவரி 14 பொது விடுமுறை, ஜனவரி 15 பொங்கல் விடுமுறை, ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத் தேவைகளை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.