விழுப்புரம்: முதல்வர் ஸ்டாலின் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் போராளியாக செயல்பட்டு பன்முகத்தன்மை கொண்டவராக செயல்படுவதாகவும் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென எம்.எல்.ஏ லட்சுமணன் வலியுறுத்தி உள்ளார்.
திமுக அவசர செயற்குழுக்கூட்டம்
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட சார்பில் செயற்குழு கூட்டம் மத்திய மாவட்ட செயலாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவதாகவும், ஏழை எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அரசிடம் போராடி அணைத்து உரிமைகளை பெற்று வருகிறார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் போராளி
முதல்வர் ஸ்டாலின் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் போராளியாக செயல்பட்டு பன்முகத்தன்மை கொண்டவராக உள்ளதாகவும், கொள்கைக்கான திமுக ஆட்சி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைந்து இரண்டவது முறையாக முதலமைச்சர் ஆட்சி கட்டிலில் அமருவார் என்றும் ஏழாவது முறையாக திமுக ஆட்சி மலர தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும் என வலியுறுதினார்.
வானூர் தொகுதி...இனி நம்வசம் - இலட்சுமணன் அதிரடி
தேர்தலில் வெற்றி பெற வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனை எடுத்துரைக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட வானூர், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற வேண்டும், வானூர் தொகுதி தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வருகிறது, இந்த முறை திமுக வெற்றி பெற்று திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் எனவும் நூறு சதவிகிதம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டம் எல்லாம் முன்னாள் அமைச்சர் பொன்முடி பங்குபெறுவார் லட்சுமணன் தலைமையில் செயற்குழு நடைபெறுவதால் பொன்முடி இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடதக்கது.