விழுப்புரம் பாணாம்பட்டு  சாலையில் அமைந்துள்ளது RK ஸ்நாக்ஸ் கடை. இக்கடை 18 வருடங்களாக இயங்கி வருகிறது. இக்கடையில் வீட்டு முறைப்படி இனிப்பு வகைகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு சாலையில் அமைந்துள்ளது ஆர்கே ஸ்னாக்ஸ். இக்கடை 18 வருடங்களாக இயங்கி வருகிறது. இக்கடையின் உரிமையாளர் கலா (47) ஆவார்.  இக்கடையில் வீட்டு முறைப்படி எள்ளடை, புதினா எள் அடை, முறுக்கு, கார முறுக்கு பூண்டு முறுக்கு அதிரசம் சோமாஸ் ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் தயார் செய்து  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இங்கு பணிபுரியும் பணியாளர்கள்  அனைவருமே திருமணமான பெண்கள். திருமணத்திற்கு பிறகு பெண்கள் சிலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இந்த பெண்களின் சுய தொழில் நடத்தி வருவது உணர்த்துகிறது. பெண்களால் முடியாதது உலகத்தில் எதுவும் இல்லை என்ற நோக்கில் இப்பெண்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகளில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். அதில், ஒன்றாக வீடுகளில் தின்பண்டங்களை தயாரிக்கும் பணியில் இப்பெண்கள் குழு ஈடுபட்டு வருகின்றனர்.


இக்குழுவில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் அனைவரும் விழுப்புரம் சுற்றுப்பகுதியில் வசித்து வருபவர்கள். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு அவரவர்கள் வேலையைப் பொறுத்து 500 ரூபாய்க்கு உள்ள ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம்  ரூ.15,000 வரை வருமானம் வருகிறது. ஒரு நாளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கார வகைகள் அன்றே விற்பனை ஆகிவிடும். இங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் விலை ஒரு பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 8 மணிக்கு வேலை தொடங்கப்பட்டு இரவு 9:30 மணி வரை நடைபெறும்.  தின்பண்டங்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல் சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தயாரிக்கும் உணவு மற்றும் தின்பண்டங்களின் சுவையின்காரணமாக  கடைக்கு  அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.


 கடை உரிமையாளர் கலாவின் கூறியதாவது :-


என்னுடைய தந்தை வீடுகளிலேயே தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். அதை நான் சிறு வயதிலேயே பார்த்து, கற்றுக்கொண்டேன்.  தந்தைக்கு  உடல் நலம் சரியில்லாமல் போனது. இதன் காரணமாக நாங்கள் இனிப்பு வகைகளை தயாரிக்கும் தொழிலை கைவிட்டு விட்டோம். அதன்பின் எனக்கு திருமணமானது. திருமணமாகி 5-வது வருடத்தில் கணவனை இழந்துவிட்டேன். எங்களிடம்  இனிப்பு வகைகளைப் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள்,  கடைக்கு வந்து நீங்கள் மறுபடியும் இனிப்பு வகைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.  எனக்கும் குடும்பத்தை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதன்பின் வீட்டிலேயே சிறியதாக செய்ய ஆரம்பித்தேன். 


நானும் எனக்கு உதவியாக இன்னொரு பெண்ணையும் வைத்து வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் தயாரித்த இனிப்பு வகையின் சுவை பிடித்து இருந்த காரணத்தினால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. தற்போது என்னிடம் 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அனைவரும்  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் ஆகும். இவர்களை வைத்து தற்போது வெற்றிகரமாக 18 வருடங்களாக இந்த கடையை நாங்கள் நான் நடத்தி வருகிறேன். திருமணமான பெண்களாலும் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் என தெரிவித்தார்கள்.