அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது. இம்மனு மீது 9-ந் தேதி எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிகொண்டிருந்த நபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ஐந்து பேரை தாலுகா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடியான நாராயணசாமி கண்டம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி ரவுடியிசம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று கண்டம்பாக்கம் ரயிலடி நுழைவு வாயிலில் பரணிதரன் உள்ளிட்ட சிலர் அமர்ந்து பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த நாராயணசாமி, திடீரென நாட்டுவெடிகுண்டை வீசி விட்டு தப்பியோடியுள்ளான். இதில் அந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்த பரணிதரனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த பரணிதரனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்தது வந்த விழுப்புரம் தாலுகா போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு துகள்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். விசாரனையில் கண்டம்பாக்கத்தை சார்ந்த ரவுடியான நாராயணசாமிக்கும் பரணிதரனுக்கும் முன் விரோதம் இருந்தது, ஊரில் நாராயணசாமியை கண்டு அனைவரும் அஞ்ச வேண்டும் என்பதற்காக நண்பர்களுடன் போதையில் நாட்டு வெடிகுண்டி தயார் செய்து வீசியது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டு வெடிகுண்டு வீசிய பரணிதரன், அவரது நண்பர்கள் வசந்தகுமார், தமிழரசன், மாதேஷ், குண்டால், கணேஷ் ஆகிய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
விழுப்புரம்: கூட்டுறவு பணியாளர்களின் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விவசாயிகள் நகைக்கடன், பயிர்கடன் வழங்கும் பணி பாதிப்பு. வாகனங்களை ஒப்படைத்த கூட்டுறவு பணியாளர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் 153 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 472 பணியாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் இச்சங்கங்கள் மூலமாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஐசிடிபி , ஆர் ஐ டி எப் என்ற திட்டத்தின் மூலம் டிராக்டர்கள், ஜே சி பி இயந்திரங்கள், லோடு வாகனங்கள் கூட்டுறவு நிறுவனம் மூலம் வாங்கப்பட்டு விவசாய பணிகளுக்கு வாடகை விடுதல், கிடங்குகள் கட்டப்பட்டன. இதன் மூலம் விவசாயிகளுக்கு பயன்பாடு இல்லாமல நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் 472 பணியாளர்கள் விடுப்பு எடுத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு வாகனத்தை ஓப்படைக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊழியர்களின் போராட்டம் காரணமாக விவசாயிகளுக்கு நகை கடன், பயிர் கடன் வழங்கும் பணி பாதிக்கபட்டுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள பணமலைப்பேட்டை அரசு பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளிக்கு வாட்டர் டேங்க் இருக்கைகளை வழங்கி ஒருவருக்கொருவர் அன்பினை பறிமாறிக்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பணமலைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டு பள்ளியில் பயின்றபோது நடைபெற்ற சுவாரசியமான பசுமையான நிகழ்வுகளை பேசி பகிர்ந்து கொண்டனர். அதனை முன்னாள் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கு அலாரம், வாட்டர் டேங்க், இருக்கைகளை வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து மீண்டும் நண்பர்களை படித்த பள்ளியில் சந்தித்தது மறக்க முடியாத நாளாக அமைந்ததாக தெரிவித்தனர்.
விழுப்புரம்: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் மத்திய அமைச்சர் அஜய்மிஸ்ராடேனியை கைது செய்ய வேண்டி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஐக்கிய விவசாய முன்னனியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி கேரி என்ற கிராம பகுதியில் மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள சென்றபோது மத்திய அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி எந்தி விவசாயிகள் போராடிய போது மத்திய அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற சொகுசு கார் கூடியிருந்த விவசாயிகள் மத்தியில் பாய்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
விழுப்புரம் நகராட்சி நகரமன்ற கூட்டம்
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் நகராட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டியதோடு தேர்தல் வருகின்ற நிலையில் மக்களிடம் சென்று எப்படி வாக்கு கேட்பது என திமுக உறுப்பினர்களே குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.