விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த சத்தியன் என்பவர், அவரது வீட்டிற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழாங்கவில்லை எனவும் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் செய்தார்.
அவர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதவது:-
கடந்த 2009-ம் ஆண்டில் விழுப்புரம் வி மருதூர் கிராமத்தில் V.K.S ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் ஸ்ரீ விநாயகா நசுர் மனை பிரிவு ஆரம்பித்து மனைகள் விற்பனை செய்தனர். அதில் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை செல்வநகர் முகவரியை சேர்ந்த செல்வராஜ், குமாரர், விநாயகமூர்த்தி மற்றும் அவரின் பவர் ஏஜெண்ட் முறையில் விழுப்புரம் திருவிக விதியில் குடியிருக்கும் ஜெயராமன் மகள் மணிவண்ணன் என்பவரும் மேற்படி மனைபிரிவின் உரிமையாளர் ஆவார்கள் மேற்படி நபர்கள் அப்போது எங்களிடம் குறைந்த மதிப்பிலான மனை விற்பனை செய்கிறோம் என்றும் மின்வசதி, மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தருகிறோம் என்று எங்களிடம் மூளை சலவை செய்ததின் பேரில் மேற்படி இடத்தில் மனை எண: (சர்வே எண் : 292/1-1.55 0.50 செண்ட மனையை) நாங்கள் வாங்கி கொண்டோம் பின்பு மேற்படி இடத்தில் அதே ஆண்டி நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்தோம்.
அப்போது எங்களது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மேற்படி இடத்திற்கு அதிகார வரம்பு உள்ள உதவி மின் பொறியாளர் அவர்களிடம் மனு கொடுத்தோம் மனுவின் பேரில் இது நாள் வரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் கேட்டதற்கு மேற்படி ஸ்ரீ விநாயகா நகர் மனை பிரிவிற்கு சாலை வசதி இல்லை என்றும் அதனால் உங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். நான் வீடு கட்டி முடித்து தற்போது குடும்பம் நடத்தி வருகிறேன். என் வீட்டின் அருகில் மேற்படி அதே மனை பிரிவில் இரண்டு வீடுகளும் ஒரு கேஸ் குடோனும் உள்ளது. நான் எனது மனைவி மற்றும் பிள்ளைகளும் மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் ) கடந்த 14 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்.
எங்கள் வீட்டை சுற்றி எந்த பாதுகாப்பும் இன்றி முள் காடாக உள்ளது. இரவு நேரங்களில் பாம்பு தேள்,பூரான், நரி, காட்டு பன்னி போன்ற விலங்கினங்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில் வாழ்ந்து வருகிறோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் என அனைவரிடமும் மின்சார் இணைப்பு வேண்டி மனு கொடுத்துள்ளேன் மேலும் விழுப்புரம் மின்சார வாரியத்திடம் மட்டும் சுமார் 20 - க்கும் மேற்பட்ட மனு அளித்தும் மின்சாரத்துறை மின் இணைப்பு வழங்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. கடந்த வருடம் எனது இரண்டு மகள்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தனர். அந்த நிலையிலும் மின் இணைப்பு வழங்கவில்லை. மேலும் மேற்படி ஸ்ரீ விநாயகா நகர் மனை பிரிவில் என் வீட்டிற்கு அருகில் வழி இல்லாத பாவாடைசாமி என்பவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளுக்கும் தங்கசேகர் என்பவருக்கு சொந்தமான தங்கம் கேஸ் குடோனுக்கும் மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.
ஆனால் எனக்கு மட்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றே மறுத்து வருகின்றனர். நிலவின் தென் துருவத்தில் செயற்கை கோள் அனுப்பி வெற்றி கண்ட இந்த நவின் காலத்தில் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மின்சாரம் இன்றி வாழம் ஒரே குடுமபம் எங்கள் குடும்பமாகத்தான் இருக்கும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் விளக்கு வெளிச்சத்தில் தான் பிள்ளைகளை படிக்கவைத்து வருகிறேன் எங்கள் குழந்தைகள் TV FAN போன்ற எந்த வசதியும் இல்லாமல் என் பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த அவலத்தை யாரிடம் கூறியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி மக்களாட்சி நடத்திவரும் வேளையில் தமிழ்நாடு அரசிற்கு கெட்டபெயர் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மின்சாரத்துறை, பதிவுத்துறை நகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுவருகினறனர்
மேற்படி ஸ்ரீ விநாயகா நகர் மனை பிரிவில் சாலை வசதி இல்லாமல் மனை பிரிவுகள் விற்பனை செய்ய அனுமதி கொடுத்தது யார்? சாலை வசதி இல்லாமல் மேற்படி மனைகளை விழுப்புரம் பதிவாளர் எவ்வாறு பதிவு செய்தார்? மேற்படி ஸ்ரீ விநாயகா நகர் மனை பிரிவில் நகராட்சிக்கு பூங்காவிற்கு இடம் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளாதா? ஸ்ரீ விநாயகா நகர் மனை பிரிவில் என மனைக்கு அருகாமையில் உள்ள பாவாடைசாமி தங்கசேகர் ஆகியோரின் மனைகளுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?
எனவே அய்யா அவர்கள் மேற்படி மனைபிரிவில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்காமல் பொதுவழிபாதையின்றி ஸ்ரீ விநாயகா நகர் மனை பிரிவு விற்பனை செய்த V.K.S ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் உரிமையாளர்கள் விநாயகமூர்த்தி மணிவண்ணன் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மனை விற்பனைக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் சாலை வசதி இல்லாத மனைகளை பதிவு செய்த பதிவாளர் மின் இணைப்பு தரமறுக்கும் மின்சாரத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்குமாறும் எனக்கு நஷ்ட ஈடு கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என இவ்வாறு அம்மனுவில் குறிபிட்டுள்ளார்.