விழுப்புரத்தில் மீன்வளத்துறை சார்பில் பொதுப்பணித்துறைக்கு சம்பந்தான 39 ஏரிக்கு இன்று டெண்டர் விடப்பட்டபோது 5 கிராம ஏரிகளுக்கு ஒருவர் மட்டுமே கோரியதால் டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்யததால் டெண்டர் கோரியவர்கள் மீன் வளத்துறை அலுவலக வாயிலில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
மீன் வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட பொதுப் பணித்துறைக்கு சம்பந்தமான 39 ஏரிகளுக்கான மூன்று வருடத்திற்கு மீன் பிடிப்பதற்கான குத்தகை விடப்படுவதாகவும் அதற்கான டெண்டர் அக்டோபர் 17 ஆம் தேதியிலிருந்து டெண்டர் கோரப்பட்டு 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு 31 ஆம் தேதி டெண்டர் விடப்படும் என மீன் வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் பேரில் ஏரியில் மீன் பிடிப்பதற்கான ஏல குத்தகை டெண்டருக்கு குத்தகை தாரர்கள் விண்ணப்பித்த நிலையில் கீழ் எடையாளம், அத்தியூர் திருக்கை,கக்கனூர்,சென்னகுனம், ஆலங்குடி ஆகிய ஐந்து கிராமங்களில் கிராமத்திற்கு ஒருவர் மட்டுமே டெண்டர் கோரியிருந்தனர்.
ஒருவர் மட்டுமே டெண்டர் கோரியதால் மூன்று நபர்களுக்கு மேல் டெண்டர் கோரினால் மட்டுமே டெண்டர் விடப்படும் என கூறி ஐந்து கிராம ஏரிகளுக்கு டெண்டர் விடாமல் அதிகாரிகள் டெண்டரை ரத்து செய்தனர். இதனையடுத்து டெண்டர் கோரியவர்கள் ஒரு நபர் மட்டுமே டெண்டர் கோரினால் ஏரி குத்தகை விடப்படாது என முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை எனவும் அதனை ஏன் டெண்டர் நோட்டீசில் குறிப்பிடவில்லை என கோரி டெண்டர் கோரியவர்கள் விழுப்புரத்திலுள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாலுகா போலீசார் டெண்டர் கோரியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி டெண்டர் நடத்தை விதிமுறைகளின் படி மூன்று நபர்களுக்கு மேல் குத்தகை ஏலம் கேட்டால் மட்டுமே விடப்படும் என்ற விதிமுறை உள்ளதால் அதிகாரிகள் அதன் படி செயல்படுவதாக கூறயதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் மீன்வளத்துறை அலுவலகத்தில் பரப்பாக காணப்பட்டது.