விழுப்புரம்: குறைதீர்ப்பு கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள் அக்குள் கட்டைகள் வழங்க கோரிக்கை வைத்த உடனே 5 நபர்களுக்கு உடனே வழங்கி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் பழனி செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மாற்றுதிறனாளிகள் கோரிக்கை
தமிழகத்தில் திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. அப்போது வி. அகரத்தை சார்ந்த அங்கமுத்து, பெரிய செவலை கிராமத்தை சார்ந்த முருகன் என்ற மாற்றுதிறனாளிகள் மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும், திருவென்ணய் நல்லூரை சார்ந்த குப்பம்மாள், கண்டாச்சிபுரம் தேவி, அக்குள் கட்டைகள் வழங்க வேண்டும், திருவெண்னைய் நல்லூரை சார்ந்த ஏழுமலை சக்கர நாற்காலிகள் வழங்க வேண்டுமென ஆட்சியர் பழனியிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆட்சியரின் உடனடி நடவடிக்கை
பொதுமக்கள் 5 பேரின் கோரிக்கை ஏற்ற ஆட்சியர் பழனி உடனடியாக தீர்வு காணும் வகையில் கூட்டத்திலேயே சக்கர நாற்காலிகள் மூன்று சக்கர சைக்கிள் வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் 5 நபர்களுக்கும் மூன்று சக்கர சைக்கிள், சக்கரநாற்காலிகள், அக்குள் கட்டைகளை குறைதீர்ப்பு கூட்டம் முடிந்த உடனே ஆட்சியர் பழனி 5 பேருக்கும் வழங்கினார். பொதுமக்கள் கோரிக்கை வைத்தவுடனே மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் சக்கர நாற்காலிகள் வழங்க நடவடிக்கை எடுத்த ஆட்சியரை செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.