Villupuram Crime: செல்போனுக்காக 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய் - விழுப்புரத்தில் பயங்கரம்

Villupuram Crime: விழுப்புரத்தில் கணவர் உடனான பிரச்னையால் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பெண், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Villupuram Crime: கணவர் செல்போனை உடைத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Continues below advertisement

காதல் டூ திருமணம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 35). 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கி தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தார். அப்போது, சென்னை மூலகொத்தளம் பகுதியில் வசித்த விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பென்னரசி(29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவர் இடையேயான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக உருவெடுத்துள்ளது.  இவர்களது விருப்பத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, 8 ஆண்டுகளுக்கு முன்பு கோபிநாத் - பென்னரசி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, விக்கிரவாண்டியில் வாழதொடங்கிய இந்த தம்பதிக்கு, 7 வயதில் கிருத்திகா என்ற மகளும், 4 வயதில் மோனிஷ் என்ற மகனும் இருந்தனர்.

அரசு வேலைக்கான முயற்சியில் கோபிநாத்:

இதனிடையே, கோபிநாத் அரசு வேலை பெற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதற்காக ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயின்றும் வருகிறார். அதேநேரம், குடும்ப வருவாய்க்காக தனது தந்தை நாகராஜ் மற்றும் சகோதரர் தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து மர இழைப்பகமும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை வழக்கம்போல்,  கோபிநாத் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றார். அங்கு பிரார்த்தனை முடிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகளை விக்கிரவாண்டிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு, கோபிநாத் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றுள்ளார்.

வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி:

பயிற்சி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பியபோது,  உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.  நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற கோபிநாத்,  அங்கு பென்னரசி, கிருத்திகா, மோனிஷ் ஆகியோர் தனித்தனி துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ந்துள்ளார்.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் உடைத்ததால் வந்த விபரீதம்?

இதுதொடர்பான காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, “பென்னரசி அடிக்கடி தனது பெற்றோர் உள்ளிட்ட சிலரிடம் செல்போனில் பேசியுள்ளார். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபிநாத். அந்த செல்போனை உடைத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த பென்னரசி 2 குழந்தைகளையும் தனித்தனி துப்பட்டாவால் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola