விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 26, 2024 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட அதி கனமழைப்பொழிவு மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றால் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம்  பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 03.12.2024 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.  
          
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகளின்படி விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களில் நாளை 13.12.2024 மற்றும் 14.12.2024 ஆகிய இரண்டு தினங்களிலும் பின்வரும் அட்டவணைப்படி நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 



13.12.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00  முகாம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் பின்வருமாறு.


1. விழுப்புரம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள், வட்டாட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம்.


2. கண்டமங்கலம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள். வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கண்டமங்கலம். 



3. விக்கிரவாண்டி குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகம், விக்கிரவாண்டி.


4. சித்தலம்பட்டு குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சித்தலம்பட்டு


5. வானூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகம், வானூர்


6. கிளியனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் கிளியனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலம், கிளியனூர். 


7. கண்டாச்சிபுரம் முகையூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகம், கண்டாச்சிபுரம்.


8.  திருவெண்ணெய்நல்லூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர்  அலுவலகம், திருவெண்ணெய்நல்லூர். 


9. ஆரசூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசூர் (இ) குமாரமங்கலம். 


10. மரக்காணம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகம், மரக்காணம். 


11. சிறுவாடி குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சிறுவாடி. 


12. திண்டிவனம், வடசிறுவளுர் குறுவட்ட கிராமங்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகம், திண்டிவனம். 


13. ஆவணிப்பூர், ஒலக்கூர் குறுவட்ட கிராமங்கள். வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஒலக்கூர். 


14. செஞ்சி, சத்தியமங்கலம் குறுவட்ட கிராமங்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகம், செஞ்சி 


15.  வல்லம், மேல்ஒலக்கூர் குறுவட்ட கிராமங்கள். வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம். 


14.12.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரைiயில் முகாம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் பின்வருமாறு. 



 1. காணை குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், காணை


2. வளவனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள். வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கோலியனூர்.  
 
3. விக்கிரவாண்டி கஞ்சனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கஞ்சனூர். 


4. அன்னியூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அன்னியூர். 


5. வானூர் உப்புவேலூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், உப்புவேலூர். 


6. நெமிலி குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் நெமிலி வருவாய் ஆய்வாளர் அலுவலம், நெமிலி 
 


7. கண்டாச்சிபுரம் அரகண்டநல்லூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்  வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரகண்டநல்லூர்


8. திருவெண்ணெய் -நல்லூர் சித்தலிங்கமடம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சித்தலிங்கமடம். 


10. மரக்காணம் பிரம்மதேசம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பிரம்மதேசம்.  


12. திண்டிவனம் மயிலம், ரெட்டணை குறுவட்ட கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மயிலம். 


13. தீவனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீவனூர். 


மேற்குறிப்பிடப்பட்ட சிறப்பு முகாம்களில் அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் இழந்துவிட்ட பொது மக்கள் தாங்கள் இழந்துவிட்ட தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் உள்ளிட்ட வருவாய்த்துறையின் ஏனைய சான்றுகள் ஆகியவற்றின் நகல்களை பெற்று  பயனடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.