பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம் -2013 பற்றிய விழிப்புணர்வு முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும், பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம் -2013 பற்றிய விழிப்புணர்வு முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது.


பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (முன்கூட்டியே தடுத்தல், தடை மற்றும் குறை தீர்த்தல்) சட்டம் 2013: பணியிடத்தில் பெண்களுக்கு உடல் ரீதியான தொல்லை, பாலியல் இச்சைகளை நிறைவேற்றக் கேட்பது, பாலியல் ரீதியலான பாதிக்கப்படும் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டம்.


உள்ளூர் புகார் குழு (Local Complaint Committee):


விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் குறைந்தபட்சம் 5 நபர்கள் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட சமூகநல அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர், தொண்டு நிறவன தலைவர் ஆகியோர்கள் இக்குழுவின் உறுப்பினர்கள். குழுவின் தலைவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.


உள்ளக புகார் குழு (Internal Complaint Committe):-


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் தலைமை அலுவலக கட்டுபாட்டின் கீழ் செயல்படும் வட்டார அளவில் ஆன அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள் சிறு மற்றும் பெரிய கடைகளில் (துணிக்கடை, நகைக்கடை, பீர் கம்பெனி, 10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு (Sexual Harassment of Women at Workplace (Prevention Prohibition and Redressal) Act 2013 2013 படி உட்புகார் குழு (Internal Complaints committee) கடந்த 2014 முதல் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் உட்புகார் குழுவில் (உறுப்பினர் 1) பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் பணிப்புரியும் அலுவலகம்/ பிற துறைகள் / பிற கிளைகள்/ பிற பணியிடங்களில் இருந்து நியமிக்கலாம், (உறுப்பினர்- 2) பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து அவற்றை களைந்திட விருப்பம் உடையவர் (அ) சமூகப் பணிகளில் அனுபவம். (அ) சட்ட அறிவு பெற்ற இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


(உறுப்பினர்- 3) தொண்டு நிறுவனம் / சமூக செயல்பாட்டாளர் / சட்ட வல்லுநர்கள் / சமூகப் பணி கல்வியாளர்கள் - பெண்களுக்கான சமூக பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம்/ மகளிர் சங்கங்களை சார்ந்த அல்லது பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வுடைய நபர்களில் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். மேலும் இக்குழுவில் மொத்த உறுப்பினர்கள் 4 நபர்களாகவும், பெண்கள் 50% இருக்க வேண்டும்.


பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளக புகார் குழு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022ல் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சமூகநலத்துறையால் பட்டியல் சேகரிக்கபட்டு இதுவரை 110 அரசு துறைகளிலும் மற்றும் 243 தனியார் நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு (Internal Complaint Committee ICC) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 73 அரசு அலுவலங்களில் மற்றும் 211 தனியார் நிறுவனங்களிலும் பாதுகாப்பு பெட்டி (Complaint Box) வைக்கப்பட்டுள்ளது.


மேலும் உள்ளூர் புகார் குழு (LCC) மற்றும் உள்ளக புகார் குழு (ICC) குழுக்களை உடனடியாக அணுக முடியாத சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு தொகுதி, தாலுக்கா மற்றும் கிராமப்புற அல்லது பழங்குடியினர் பகுதிகளில் உள்ள தாலுக்காவிலும், நகர்ப்புறத்தில் உள்ள வார்டு அல்லது நகராட்சியிலும், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களையும் பொறுப்பு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரப்பெறும் புகார்களை 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளூர் புகார் குழுவிற்கு (LCC) அனுப்பி வைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்மந்தமான புகார் அளிக்க மாவட்ட சமூகநலத்துறை, பெண்களுக்கான இலவச உதவி எண்.181 மற்றும் She-Box http://shebox.nic.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.


பெண்கள் பணியிடத்தில் பாதிக்கப்பட்டால் மூன்று மாதத்திற்குள் துறையின் அதிகாரியிடம் கடிதமாக அளிக்க வேண்டும். அதற்கு துறையின் அதிகாரி 90 நாட்களுக்கு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் மற்றும் நீதி வழங்கிட வேண்டும். தற்பொழுது, அரசுத்துறை மட்டுமல்லாமல் அரசியல், தனியார் மற்றும் பிற துறைகளிலும் பெண்களின் மீது பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்கள் நடந்து வருகின்றன. அதனை நீதித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உன்னிப்புடன் கவனித்து வருகின்றன என்று முதன்மை மாவட்ட நீதிபதி/மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.பூர்ணிமா மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்கள்.