விக்கிரவாண்டி அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மது பிரியர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. 


விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள முத்தம் பாளையம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடை  மதுபடை கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மார்க் மதுபான கடையில் நேற்று காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கிராமத்தில் சில இளைஞர்கள் மது அருந்துவதற்காக கடைசென்று மது பாட்டிலை வாங்க சென்று உள்ளனர். அப்பொழுது சீல் பிரிக்கப்படாத மது பாட்டில் உள்ளே கருப்பான பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளர்களுடன் இதுகுறித்து கேட்டுள்ளன்ர்.


ஆனால் முறையான பதில் விற்பனையாளர்கள் அளிக்காமல் அலட்சியமாக பேசியதோடு இளைஞர்களை விற்பனையாளர்கள் விரட்டியுள்ளனர். இதனையடுத்து மது வாங்கிய இளைஞர்கள் மதுபாட்டில் உள்ளே கரப்பான் பூச்சி உள்ளதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருக்கும்  வைரலாகி வருகின்றன. மேலும் அரசு மதுபானக்கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பூச்சிகள் இருப்பதினால் இதை வாங்கி அருந்தும் மது பிரியார்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகும் பண்டிகை காலங்களில் லாபம் பார்க்கும் நோக்கத்தோடு டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவதாக மதுபிரியர்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.