ஆளுநர்களின் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும் தமிழிசை அறிவுரை கூறினார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், “துணை நிலை ஆளுநர்கள் இருக்கும் இடங்களில் முதல்வர்கள் அதிகாரம் குறித்து கூறுகின்றார்கள். ஆளுநர்களின் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும். ஆளுநர்கள் துணைநிலை ஆளுநர்கள் நேர்மறையாக செயல்பட்டால் விவாதங்கள் வந்து விடுகின்றது எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.


தமிழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மாறுபாடு இல்லை. ஆனால் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய சரித்தரம் இருக்கின்றது. மிகக்கடுமையான முயற்சிகளுக்கு பின்பு, பல போராட்டங்களுக்கு பின்பு தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. அதனால் அவ்வளவு இலகுவாக தமிழ்நாடு என்ற வார்த்தையை புறந்தள்ளி விடமுடியாது என்பது தான் எனது கருத்து.


மற்ற ஆளுநர்களை பற்றி பேசவில்லை நான் மக்களுக்காக பணியாற்றுகின்றேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கின்றோம். அதனால் தான் தமிழகத்தில் கூட குடும்பதலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்து கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு வரும் 23 ந்தேதி நடைபெறும் விழாவில் துவக்கி வைக்க இருக்கிறோம்” எனக் கூறினார்.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.