விழுப்புரம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவிட்டு மகேஸ்வரன் என்ற ரவுடி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


தலையில் கல்லைப் போட்டு கொலை:


விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள வி. புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித்(55). இன்று காலை இவர் தனது  வீடு அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த மகேஸ் (எ) மகேஸ்வரன் என்பவர், இந்திரஜித்திடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக திடீரென தகராறில் ஈடுப்பட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டதுள்ளது.


அப்போது ஆத்திரமடைந்த மகேஸ்வரன் முதியவர் இந்திரஜித்தை கீழே தள்ளி பெரியளவிலான கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் முதியவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.


பிரபல ரவுடி:


அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களை சேகரித்த காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே அங்கிருந்து சென்ற மகேஸ்வரன் தனது வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு புதிய சட்டையை உடுத்திக்கொண்டு வளவனூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.


அவரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான முழு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மகேஸ்வரன் ரவுடியாக வளம் வந்துக்கொண்டு இருப்பதும், இவர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், 6 முறை இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதும் குறிப்பிடதக்கது.