விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென வெடித்ததால் தந்தை மகன் சம்பவ இடத்திலே உடல் சிதறி பலியானார்கள். வெடி பொருள் வீரியம் அதிகமாக இருந்ததால் உடல் மற்றும் வாகன பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசிப்பட்டது. புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன்(37) இவர் தமிழகப்பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதிஷ் உடன்  தீபாவளி கொண்டாட இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தார்.


திண்டிவனம் ரயிலில் 1 கிலோ தங்க நகைகள்: பட்டாசு சோதனையில் சிக்கி அபராதம் செலுத்திய வியாபாரி!


அப்போது, புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலை சந்திப்பில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக, இரண்டு சக்கர வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில்  தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை  உடல் சிதறி உயிரிழந்தனர். அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூறைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம்போல் காட்சியளித்தது.



மோசடி புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்- நெல்லையில் பெண் பரபரப்பு புகார்




இந்த வெடி விபத்து சம்பவம் நடைபெறும் போது அந்த சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர் இவர்கள் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் இரு மாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடி விபத்து குறித்து விசாரனை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஐஜி பாண்டியன்,  விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து  விசாரணை  செய்தனர். தீபாவளி நன்னாளில் தந்தை மகன்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர்