‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமை


இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வ மானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடியவை.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.




ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது 


இந்த நிலையில், ஆலிவ் ரிட்லி ஆமைகள், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் உள்ளிட்ட கடலோர பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாககும். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தீர்த்தவாரி பகுதியில் ஆமைகள் முட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படும். முட்டைகள் பொறிந்து வெளியே வரும் ஆமை குஞ்சுகளை கடலில் விடுவர். இந்த ஆண்டு இதுவரை 4000 ஆமை முட்டைகள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று 100 ஆமை குஞ்சுகள் பொறிக்கப்பட்டது. இந்த ஆமை குஞ்சுகளை வனத்துறை அதிகாரி கடலில் விட்டனர்.