விழுப்புரம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

Continues below advertisement

மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

 

Continues below advertisement

மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்துத்துறைகளும் சிறந்து விளங்கிடும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், கல்வித்துறையில் பல்வேறு வரலாற்று சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சிறப்புத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி சதவீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயிலும் வகையில் உரிய நேரத்தில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், விலையில்லா மிதிவண்டிகள் போன்றவற்றினை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், 2025 2026 கல்வியாண்டில் அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு நிதியுதவி பெறும் சுமார் 136 மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 8125 மாணவர்கள், 8795 மாணவிகள் என மொத்தம் 16,920 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.8,16,76,700/- மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், கோலியனூர் வட்டார கல்வியை சேர்ந்த 8 அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 831 மாணவர்கள், 1115 மாணவிகள் என மொத்தம் 1946 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.93,79,300/- மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இதில், விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, பீம் நாயக்கன் தோப்பு அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டமனாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பில்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.