விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி தர்மபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள பொதுமக்கள் சார்பில் தங்களது சொந்த நிதியின் மூலம் 21 நாட்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கம். இதுபோல் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் பாரம்பரியம் மாறாமல் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்காமல் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொது மக்களுக்கு சொந்தமான திரௌபதி அம்மன் கோயிலை இந்து அறநிலை துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அறநிலைத்துறை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்த இப்பகுதி பொதுமக்கள் நாங்கள் எங்கள் கோயிலை இந்து அறநிலைத்துறைக்கு ஒப்படைக்க மாட்டோம், இந்த கோயிலுக்கு அரசு சார்பில் எந்த வருவாயும் இல்லை, இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தாரின் ஒத்துழைப்பை வைத்து தான் நாங்கள் அமைதியாக ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருகிறோம் என்று கூறினர் இந்த கோயிலை இந்து அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும் என்று ஒரு சிலர் புகார் மனு கொடுத்துள்ளனர். அறநிலை துறை அதிகாரிகள் கூறினர் அந்த ஒரு நபரின் புகார் மனுவின் அடிப்படையில் தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆதரவாக இல்லாமல் தனி ஒருவருக்கு ஆதரவாக செயல்படுவது ஏதோ உள்நோக்கம் உள்ளது எனக் கூறி இந்து அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து மரக்காணம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வணிகர்களும் ஒன்று சேர்ந்து கடைகளை அடைத்துவிட்டனர். இதுபோல் இங்குள்ள பொதுமக்கள் சார்பில் மரக்காணம் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் இதனைப் பார்த்த வருவாய்த்துறை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்