விழுப்புரம்: மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டியதை விடுதலை சிறுத்தை கட்சி செய்துக் கொண்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன்...
திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014 ல் மக்கள் நல கூட்டணியில் பயனித்த போது மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம். கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்தனர். திமுகவை மிரட்ட மாநாட்டு நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். அப்போதுதான் திமுகவிடம் அதிக சீட்டு பேரம் பேச முடியும் என பேசுகிறார்கள். சிலர் அதிமுகவுடன் கூட்டணி என பேசிகிறார்கள். மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம். மாநாடு நடத்த வேண்டும் எனக்கு சொல்லிக்கொடுத்தது மக்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி. மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி. மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடுள்ள காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்கிறது.
பெண்களை மாநாட்டுக்கு அதிகம் அழைத்து வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சியின் மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை யாரும் பங்கேற்கலாம் என கூறினேன். மதுவை ஒழிப்போம் என்பதில் திமுக, அதிமுக, இடசாரிகள், விசிகவுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய பிரச்சினை.
காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம். அது போல் மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். மது குடிக்கும் இடத்தில் எப்படி சாதி இல்லையோ, அப்படியே மது ஒழிக்கவும் சாதி வேண்டாம். பாமகவும், பாஜகவுடனும் அணி சேர முடியாது. பாஜக கட்சியில் பல நண்பர்கள் உள்ளனர். பாமக மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.
வெளிப்படையாக திமுகவுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்கு தொடர்பாக அரசியலமைப்பு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. 47 வது உறுப்பில் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறை படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிக்கை வைக்கிறோம் ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கு மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விசிக வலியுறுத்துகிறது.
எல்லா ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு கொள்கை பேசப்பட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர் அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கும் மாநாடு. திமுக கூட்டணியில் இருப்பதால் முதல்வரிடம் மனு கொடுக்கலாமே என கேட்கிறார்கள். ஆனால் இது மக்களே ஒன்று சேர்ந்து கேட்கவேண்டிய கோரிக்கை. வரலாற்று தாக்கத்தை ஏற்படுத்தபோகும் மாநாட்டு என்று பேசினார்.