தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், இயக்குநரும் ஆன கெளதமன் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நவீன தீண்டாமை சுவர் எழுப்பி தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டி, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்ரணியம் அவர்களிடம் புகார் மனு அளித்தார், மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களை அடித்து அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலை சிதைத்து சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கும் தீட்சிதர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் அக்கோயிலை மீட்க வேண்டும். 2000-ம் ஆண்டு சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் திருச்சிற்றம்பலம் மேடையில் தேவாரம், திருளாகம் பாடியதால் தீட்சிதர்களால் கடுமையாக தாக்கப்பட்டார் பின் அவரும் தமிழ் உணர்வாளர்களும் தொடர்ந்து போரடியதால், அப்போதைய முதல்வர் கலைஞர் அரசினால், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் அரசாணை பெற்று சிவனடியார் ஆறுமுகசாமி அதே திருச்சிற்றம்பல மேடையில் பாடியபோது தீட்சிதர்கலாள் மீண்டும் தாக்கப்பட்டார். இச்சம்பவத்திற்கு பிறகு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் திருச்சிற்றம்பலத்தின் மீது நின்று தேவாரம் திருவாசகம் பாடவும் பக்தர்கள் அங்கு நின்று நடராஜரை வணங்கவும் பூரண அனுமதி உண்டு என்றும், எக்காரணத்தைக் கொண்டும். தீட்சிதர்களை தடுக்கக் கூடாது எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த திருச்சிற்றம்பால மேடையில் சிவனடியார்களையும் அனுமதிக்காமல், பக்தர்களையும் அனுமதிக்காமல் தீண்டாமை நிலை திட்டமிட்டு தீட்சிதர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலம் முடிந்தும் உலக நன்மை வேண்டி பக்தர்கள் அனைவரும் கீழே இருந்து தரிசனம் செய்யங்கள் என பதாகை எழுதிவைத்து இப்பொழுதும் பக்தர்களை திருச்சிற்றம்பல மேடையில் ஏற்றாமல் கீழேயே நிற்க வைத்து மேலிருந்து மாலைகளையும், விபூதிகளையும் வீசி எறிகிறார்கள். 2015, மே 01 - ல் தில்லை நடராஜருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அப்பொழுது வந்த பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு தரிசனமாக சிதம்பர ரகசிய திரையை விலக்கி தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிண்பு நிரந்தரமாக சிதம்பர ரகசிய திரை விலக்கி காட்டப்படாமல் இன்று வரை ஆறு ஆண்டுகளாக தடை செய்து விட்டார்கள். இது என்ன சிதம்பர ரகசியம் என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இன்றும் குடும்பம் குடும்பமாக தீட்சிதர் குடும்பங்களுக்கு திரை விலக்கப்படுகிறது நடராஜனின் நேரடி தரிசனம் காட்டப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சிதம்பர ரகசிய திரை விலக்கி ஆறு ஆண்டுகள் ஆகிறது இந்நிலையில் எங்களின் நடராஜர் உள்ளே இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. மேலும் தீட்சிதர்களின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினால் எங்கள் பக்கம் துர்கா ஸ்டாலின் உள்ளார்கள் என மிரட்டுகிறார்கள். ஆகவே உடனடியாக அரசு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் இல்லையெனில் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார்.