விழுப்புரம்: விஷ சாராயம் அருந்தி முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 11 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களும், மருந்துகளும் போதிய அளவிற்கு இருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் பாதிக்கபட்டு 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிப்பிற்குள்ளானவர்களை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு திருவண்ணாமலை, ஸ்டான்லி, சேலம் மருத்துவமனைகளிலிருந்து சிறப்பு மருத்துவ குழு வருகை புரிந்து மருத்துவம் செய்து கொண்டிருப்பதாகவும், சாராயம் அருந்திய 8 பேருக்கு மருத்துவமனையில் டயாலிசிலிஸ் செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவர் லதா, லட்சுமணர் ஆகிய இருவரின் தலைமையில் 11 பேர் கொண்ட மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள வளாகமாக முண்டியம்பாக்கம் மருத்துவமனை உள்ளதாகவும், மருத்துவர்களும், மருந்துகளும் போதிய அளவிற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசியப உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் விவகாரத்தினை அரசியலாக்க வேண்டிய நிகழ்ச்சி இது அல்ல எனவும் முதல்வர் பதவி விலக வேண்டும் என சிலர் உலறி கொண்டிருப்பதாகவும் அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனிசாமி, 2001ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அம்பத்தூரில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், திண்டுக்கல், காஞ்சிபுரம் 2018, 2020 போன்ற ஆண்டுகளில் கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் அரசியல் பேச வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என குற்றஞ்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் தான் குட்கா, கள்ளச்சாராயம் அதிகம் விற்பனை செய்யபபட்டுள்ளதாகவும் இரண்டு வருட ஆட்சியில் கள்ளச் சாரயத்தினை ஒழிக்க தீவிர நடவடிக்கையில் முதலமைசர் ஈடுபட்டதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 55474 கள்ளச்சாராய வழக்குகள் போடப்பட்டு 55173 பேர் கைது செய்யப்பட்டு 69 நான்கு 1077 இரு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 79 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வரை ராஜினாமா செய்ய கூறும் அருகதை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை காவல் துறையை மிக திறமையாக முதலமைச்சர் செயல்படுத்தி கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.