விழுப்புரம் : திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினை தான் காட்சிகளாக இன்று பார்த்து கொண்டிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


எக்கியார் குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த  பிரேமலதா விஜயகாந்த், எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஒருத்தரை விடாமல் சந்தித்து பேசியதாகவும் அவர்கள் மதுவை ஒழிக்க நிரந்த தீர்வு வேண்டுமென வலியுறுத்தியதாகவும் மதுவை அருந்தியவர்கள் தன்நிலையை அறிந்து கண்ணீர் விடுவதாகவும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைப்பதாகவும், சிறந்த முறையில் இங்கு சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார்.


டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும் என பெயரளவில் மட்டுமே கூறி 500 கடைகள் மூடப்படுவதாக அறிவித்து ஆனால் தானியங்கி மூலம் மது வழங்கும் திட்டத்தினை நகர பகுதிகளில் தமிழக அரசு தொடங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.  காவல் துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் கண்டிப்போடு செயல்படுத்த வேண்டும் என்றும் சாராயம் அருந்திய நிறைய பேருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது என்றும் கள்ளச்சாராயம் ஆய்வு என்பது கண்துடைப்பாக ஒரு மாதத்திற்கு ஆய்வு செய்து செயல்படுவார்கள். அதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் போட்டோ ஷீட் ஆட்சி தான் இன்று தமிழகத்தில்  நடைபெறுவதாக தெரிவித்தார்.


மேலும், “உதய நிதி ஒரு செங்கல்லை தூக்கினால் அமைச்சர் பதவி தருகிறார்கள் நாசர் செங்கல்லை தூக்கினால் பதவி விலக்குகிறார்கள் திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினை தான் காட்சிகளாக இன்று பார்த்து கொண்டிருக்கிறோம். மக்கள் வாய்ப்பு கொடுக்கும் போது பொற்கால ஆட்சி தேமுதிக செய்யும் ஊழல் வாதிகள் தான் ஓட்டுக்கு காசு கொடுக்க முடியும் தேமுகவிகற்கு வாய்ப்பு கொடுங்கள்” என கூறினார். ஜி கொயரில் சோதனை நடத்துகிறார்கள் அதன் பிறகு விவரங்களை வெளியிடுவதில்லை எனவும் கூறியுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண