விழுப்புரம் : விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததின் விளைவாக கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒலி பெருக்கி மூலம் சாராயம் விற்பனை செய்யக்கூடாதென எச்சரிக்கை செய்தனர். 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள  எக்கியார்க்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் 48 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மெத்தனால் சாராயம் விற்பனை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டு இவ்வழக்கு சிபி சி ஐ டி க்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரனை நடைபெற்று வருகிறது. உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்றைய தினம் காவல் துறை வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று சாராயம் விறனை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உத்தரவிட்டார்.  


அந்த உத்தரவின் பேரில் சேந்தனூர் கிராமத்தில் உள்ள சுதா என்ற பெண் ஊராட்சி மன்ற தலைவி தங்கள் ஊரில் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் விற்பனை செய்யக்கூடாதெனவும் அப்படி விற்பனை செய்பவரக்ள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடுமென ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தார். இதே போன்று கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள், மது கடத்தலில் ஈடுபடுவர்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவேண்டுமெனவும், அப்படி தெரிவிப்பவரக்ள் பெயர் ரகசியமாக காக்கபடுமென தெரிவித்துள்ளனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண