புதுச்சேரி: புதுச்சேரியில் காவலரின் இருசக்கர வாகனத்தை தனியார் பேருந்து உரசியதால் டிரைவரை சரமாரியாக தாக்கிய காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.


வில்லியனூர் காவல்  நிலையத்தில் காவலராக  சிவராந்தகம் பகுதியை சேர்ந்த பழனி பணியாற்றி வருகிறார். இவர் சக காவலருடன் இருசக்கர வாகனத்தில் வில்லியனூர் பகுதியில் ரோந்து சென்றார். மாடவீதி சந்திப்பில் சென்ற போது திருக்கனூரில் இருந்து வில்லியனூர் வழியாக புதுவைக்கு வந்த தனியார் பேருந்து காவலர்கள்  சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இதில் அவர்கள் கீழே விழுந்தனர். இதில் ஆத்திரமடைந்த காவலர் பழனி பேருந்தில் ஏறி வந்து டிரைவரை ஹெல்மெட் மற்றும் கையால் தாக்கினார். இந்த காட்சி பஸ்சில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.


இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பேருந்து டிரைவர் மீது தவறு இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்து வேண்டுமே தவிர அவரை காவலர்  ஹெல்மெட்டால் தாக்குவதும், அது தொடர்பாக வெளியான சி.சி.டி.வி. வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவலர்  தாக்கியதில் லேசான காயமடைந்த பஸ் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.