கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் உள்ள சொந்தம் கொண்டாடி வருவதாக  சிவகுமார் என்பவர் மீது குற்றம் சாட்டி தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் மனு அளிக்க வந்தனர்.
  

 



 

அப்பொழுது பேசிய அவர்கள்,தங்களது ஊராட்சியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் கிராம மக்கள் அனைவரின் சார்பிலும் நிலம் தானமாக கொடுக்கபட்டு அந்த இடத்தில் ஊருக்கு என அரசு பள்ளி  கட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தங்களது கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் அங்கு வந்து படித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அந்த பள்ளிக்கூடம் பெரும் பாலான ஏழை மாணவர்கள் கல்வி கற்க பெரும் அளவில் உதவி உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 1000 பேர் அளவில் படித்து வந்த அந்த பள்ளியில் தற்போது வெறும் 70 பேர் தான் படித்து வருகின்றனர். 


 



 

 

இதற்கு முக்கிய காரணம் தற்போது அந்த பள்ளி வளாகத்தில் ஒரு பகுதி கட்டிடத்தினை தனிநபர் ஒருவர் பூக்களை வைத்து பயிர் செய்து வருவதாகவும் பள்ளி வளாகத்தையும் ஒரு பகுதியில் குடியிருந்து வருகின்றனர், மேலும் தனது சொந்த வாகனங்களை வாகங்களை நிறுத்திக்கொண்டு தனது சொந்த நிலம் போல அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டினார் மேலும் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : திருமணமே செய்து கொள்ளாத எம்.ஆர்.காந்திக்கு பேரன்கள் இருப்பது எப்படி? - GRANDSON OF MR GANDHI உண்மையில் யார்?