கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், புதுச்சேரி மாநிலம், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 14ஆம் தேதி முடிய 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.




கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்தடை ஆணையின்படி இந்த ஆண்டும் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மேற்காணும் தடைசெய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம். கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான அந்த 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பாட்டு மீன்வளம் பெருக வாய்ப்புள்ளது. அதனால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி மேற்குறிப்பிட்டுள்ள 61 நாட்கள் முடியும் வரை அனைத்து மாவட்ட மீனவர்கள், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.




மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகளில், இழுவைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழு நேர மீன் பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீன்வர்கள் தங்கள் குடும்பத்தினை சிரமமின்றி நடத்தி செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.


கடந்த 2021-ம் ஆண்டு 1.72 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவராணத் தொகை தலா ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்புதல் வழங்கி அரசு ஆணை பிறப்பித்தது. தற்போது கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி (பகுதி) ஆகியவற்றை சேர்ந்த 25,402 பயனாளிகளும், மேற்கு கடற்கரை மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 1,72,000 பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண