Sowmiya Anbumani: திண்டிவனத்தில் களமிறங்கிய சௌமியா அன்புமணி... ரூ.23 லட்சம் மதிப்பில் நலத்திட்டம்
நமக்கு நாமே திடத்தின் கீழ் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் மற்றும் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான ஹைமாஸ் விளக்கை திறந்து வைத்தார்.

விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நமக்கு நாமே திடத்தின் கீழ் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் மற்றும் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான ஹைமாஸ் விளக்கை பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி, 31வார்டுக்குள்பட்ட பூதேரி மாரியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அரசு நியாயவிலைக் கடைக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கிவைத்தார். தொடா்ந்து, அந்தப் பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் 31-ஆவது வார்டு நகா்மன்ற உறுப்பினா் மு.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, திண்டிவனம் சேடன்குட்டை பகுதியை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கின்ற முக்கிய பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் இருண்ட நிலையில் காணப்பட்டதால், அவ்வபோது விபத்துகள் ஏற்பட்டு வந்தது . குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் பத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு நிதி திட்டம் 2023-2024-ன் கீழ் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ரூபாய் 7 லட்சம் ஒதுக்கீடு செய்து உயர் கோபுர மின் விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.
இந்நிலையில், திண்டிவனம் வருகை தந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உயர் கோபுர மின் விளக்கை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் . தொடர்ந்து அங்கிருந்த அம்மன் கோயிலுக்கு சென்ற சௌமியா அன்புமணி சாமி கும்பிட்டு தரிசனத்தில் ஈடுபட்டார். முன்னதாக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வேலு நாச்சியார் புகைப்படத்தை சௌமியா அன்புமணியிடன் வழங்கினார். இதில் பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடந்து, விழாவிற்கு வந்த பெண்களுக்கு தன்னை எவ்வாறு தற்காத்துகொள்ளவேண்டும் எனவும் பெண்கள் தைரியமாக இந்த சமுதாயத்தில் முன்வந்து போராட வேண்டும் என தெரிவித்தார்.