தளபதி கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் 67-வது தமிழ்நாடு மாநில சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் வீரர்கள் பங்கேற்கும் கபடி திருவிழா தொடங்கியது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளையொட்டி, விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் விழுப்புரம் நகர திமுக இணைந்து நடத்தும், தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் 67-வது தமிழ்நாடு மாநில சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப், தளபதி கோப்பைக்கான கபடி திருவிழா நேற்று இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தையொட்டி, இரவை பகலாக்கும் மின் ஒளியில் மிகப் பிரமாண்டமாய்த் தொடங்கியது. இந்த கபடி திருவிழா வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


முன்னதாக, கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கெளதம சிகாமணி, தளபதி கோப்பையை அறிமுகம் செய்து வைத்து, கபடி வீரர்களை வாழ்த்திப் பேசி, கபடி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கபடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். போட்டியின் தொடக்கமாக, களம் ஒன்றில் தூத்துக்குடி - திருவண்ணாமலை,  களம் இரண்டில் விழுப்புரம் - திருவள்ளூர், களம் மூன்றில் ராமநாதபுரம் - தென்காசி அணியினர் மோதினர். முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு மாநில சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் அணியினர் விளையாடி வருகின்றனர். இன்று 16 அணிகளாக குறைத்து விளையாட உள்ளனர்.


மேலும்,  ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்வதைப்போல, டாடா ஏசி வாகனத்தில் கபடி வீரர்களை பேரணியாக அழைத்துச் சென்றதால் பரபரப்பு.


கபடி திருவிழா தொடங்குவதற்கு முன்பாக, விழுப்புரம் பழையப் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து, புதிய பேருந்து நிலைய வளாகத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலுக்கு, கபடி வீரர்கள் ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்வதைப்போல, ஒவ்வொரு மாவட்ட அணியினரும் ஒரு டாடா ஏசி வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த லயோலோ கல்லூரி மாணவர்கள் சென்ற டாடா ஏசி வாகனம் விபத்துக்குள்ளானதில், அதில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்று வரும் கபடி திருவிழாவிற்கு பெண்கள் அணியினரை பாதுகாப்பான வகையில் வாகனத்தில் பேரணியாக அழைத்துச் செல்லாமல், அவர்களை ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்வதை போல, டாடா ஏசி வாகனத்தில் பேரணியாக் அழைத்துச் சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.