கடலூர் செம்மண்டலம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது வீட்டில் இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் ஆயுதபூஜைக்காக வீட்டை தூய்மை செய்யும் பணியில் அசோகன் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து செல்லும் ஷூவுக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாம்பு ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். 




அசோகன் வீட்டிற்கு வந்த செல்லா குழந்தைகள் அணியும் ஷூவை பார்த்தார் உள்ளே நல்ல பாம்பு குட்டி ஒன்று படம் எடுத்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அந்த ஷூவுக்குள் இருந்து அந்த நல்ல பாம்பு குட்டியை வெளியில் எடுத்தார். நல்ல பாம்பை பொறுத்தவரை முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுக்கு கூட கொடிய விஷம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் குழந்தைகள் பள்ளிக்கு ஷூ அணிந்து செல்லவில்லை. எப்போதுமே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்  அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்லும்போது ஷூவை அணிந்து செல்வதை வழக்கமான நடைமுறையாக கொண்டு உள்ளனர். எனவே பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்களது ஷூவை நன்கு பார்த்துவிட்டு அதன் பிறகு அணிந்து செல்வது நல்லது என பாம்பு ஆர்வலர் செல்லா தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண