விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் 87 சதவீத விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாற்பதாயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 33 ஆயிரம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
சிறப்பு தீவிர திருத்தம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி விழுப்புரம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது.
87 சதவீதம் அளவிற்கு விண்ணப்பம் விநியோகம்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்., விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 17.27 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுக்கு 87 சதவீதம் அளவிற்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்கது. மீதமுள்ள 13 சதவீதம் வீட்டில் ஆட்கள் இல்லாத சூழல் உள்ளிட்ட நிலையில் அலுவலர்கள் வீட்டிற்கு மூன்று முறை செல்வார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் என 1970 அலுவலர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட அலுலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
2002-2025 இந்த இரண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயர் உள்ளவர்கள் யார் என்று அறிந்து அந்த வாக்காளர்களுக்கு பதிவு செய்ய வாக்குச்சாடி அலுவலர்கள் உதவி செய்த வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கடந்த இரண்டு நாட்ககாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்பபெரும் பணி நடைபெற்ற வருகிறது.
தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40ஆயிரம் படிவங்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றின் 33 ஆயிரம் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள்ன்50 படிவங்களை பெற்று வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று படிவங்களை பெற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.