விழுப்புரம் ரயில்  நிலையம் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதுடன் உடல் அலுப்பே இல்லாமல் பயணம் செய்ய எளிதாக இருப்பதால் பொதுமக்கள், பெரும்பாலானோர் பஸ் பயணத்தை காட்டிலும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற ரயில் நிலையங்களுக்கு அடுத்தப்படியாக பெரிய ரயில் நிலையமாகவும், முக்கிய சந்திப்பாகவும் விளங்கி வருவது விழுப்புரம் ரயில்  நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில்  நிலையம் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இந்த ரயில்  நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் விழுப்புரம் ரயில்  நிலையம் எந்நேரமும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் காணப்படுகிறது.


ரயில்  பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்  நிலையங்கள், ரயில் களில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் ரயில்  நிலையத்திலும் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக இங்குள்ள நடைமேடைகளில் லிப்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதுபோல் நின்றுசெல்லாத தேஜஸ் போன்ற ரயில் களின் வசதிக்காகவும், ரயில் களின் வேகத்தை அதிகரிக்கும் வகையிலும் இங்குள்ள 6-வது நடைமேடைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் ரயில்  நிலைய முன்புற வளாகத்தில் பொலிவிழந்த நிலையில் இருந்தது


இந்தநிலையில் பூங்காவை தற்போது சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர ரயில்  நிலைய முகப்பு பகுதியில் பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் விதமாகவும் புதிதாக ''I LOVE VILLUPURAM " என்ற ஆங்கில சொற்களால் வாட்டர் லோகோவுடன் கூடிய 'செல்பி கார்னர்' பகுதியையும் ரயில் வே நிர்வாகம் அமைத்துள்ளது. இதன் முன்பு ரயில்  பயணிகள் நின்று செல்பி எடுத்துக்கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதனால் வண்ண, வண்ண விளக்குகளில் அந்த இடமே ஜொலிக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய முயற்சி பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.