விழுப்புரம்: தமிழகத்தில் அரிசி சர்க்கரையில் தட்டுப்பாடு இல்லை, கூடுதலாகவே இருப்பு வைத்துள்ளதாகவும், பாமாயில் 2.9 கோடி பாக்கெட்டுகள் வாங்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் உள்ளதாகவும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் வாங்குவதற்கு ஏற்பட்ட சிக்கலினால் பருப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அடுத்த மாதத்திற்குள் குடும்ப அட்டைத்தார்களுக்கு  அனைவருக்கும் பருப்பு  வழங்கப்படுமென உணவு பாதுகாப்புதுறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகிலுள்ள டிஎன்சிஎஸ்சி குடோன் மற்றும் நியாய விலைக்கடை, மத்திய கூட்டுறவு வங்கியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மேற்கொண்டனர்.

 

ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் கடைகள் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்க வேண்டுமென தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்  விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும்  1854 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் பாமாயில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்குவதில் தட்டுப்பாடு இருந்தது இந்த மாதத்தில்  சீராகி உள்ளதாகவும் பருப்பு அடுத்த மாதத்திற்குள்  அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் விவசாய கடன் கடந்த ஆண்டு மட்டும் 650 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

தமிழகத்தில் அரிசி சர்க்கரையில் தட்டுப்பாடு இல்லை என்றும் கூடுதலாகவே இருப்பு வைத்துள்ளதாகவும், பாமாயில்  வழங்க 2.9 கோடி   பாமாயில் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் உள்ளதாகவும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் வாங்குவதற்கு ஏற்பட்ட சிக்கலினால் பருப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அடுத்த மாதத்திற்குள் குடும்ப அட்டைத்தார்களுக்கு  அனைவருக்கும் பருப்பு  வழங்கபப்டுமென கூறினார். 

 

ஆண்ட்ராய்டு  ஆப் மூலமாக அரிசி வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதிய குடும்ப அட்டைகள் 2.81 லட்சம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 85 மெட்ரிக் டன் கோதுமை இருப்பு உள்ளதாக கூறியுள்ளார். உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி 21 ஆம் தேதி மத்திய அமைச்சரை சந்தித்து கோதுமை தட்டுபாடு உள்ளதால் கூடுதலாக வழங்க வலியுறுத்த உள்ளதாகவும், ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கியதுபோன்று பொருட்களை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.