புதுச்சேரியில் புத்தாண்டு முடிந்து கொரோனா கட்டுபாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பள்ளிக்கு வந்தனர். புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளின் படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மாணவர்களை முககவசம் அணிந்து அனுப்பும்படி தகவல் தெரிவித்திருந்தனர். அரசு பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் முககவசம் அணிந்து வரும்படி ஒட்டப்பட்டிருந்தது. இதனால் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர்.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்